பட்டிருப்புக் கல்வி வலயம் பாடசாலை மாணவர்கள் ஆரியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாவருடம் சாதனையாளர் பாராட்டு விழாவினை நடாத்தி வருகின்றது. 2012 ம் ஆண்டிற்கான சாதனையாளர் பாராட்டு விழா 02.12.2013 திங்கட்கிழமை மு.ப.9.00 க்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் மட்/களுவாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ றியர் அட்மிரல் மொஹான விஜயவிக்கிரம கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களும், அதிவிசேட அதிதியாக பௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஜனாதிபதியின் ஆலோசகருர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு.N.A.A. புஸ்பகுமார அவர்கள் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபை, அவர்களும் ஜனாப் M.T.A. நிஸாம் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு.S.சுதாகர் பிரதேச செயலாளர் ம.தெ.எ.ப அவர்களும் திரு.N.வில்வரெத்தினம் பிரதேச செயலாளர் போரதீவுப் பற்று அவர்களும் திரு.ஜயந்த ரத்நாயக்க உ.பொலிஸ் அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொளரவிப்பும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
0 Comments