Advertisement

Responsive Advertisement

இறுதிப்போர், சனல்4 குறித்த சம்பந்தன் உரைக்கு எதிராக ஆளும்கட்சியினர் போர்க்கொடி! - பாராளுமன்றத்தில் சலசலப்பு.

தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.யின் உரைக்கு ஆளும்தரப்பு எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதிக்கட்ட மோதலின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றது. குறித்தும் சனல் 4 வீடியோக்கள் தொடர்பாகவும் சம்பந்தன் எம்.பி. தொடர்ந்து பேசினார். இதற்கு ஆளும் தரப்பு பிரதம கொடரா அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர், பீ.எச்.பீ.பியசேன ஆகியோர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஒழுங்குப் பிரச்சினையொன்றை ஏ. எச்.எம்.அஸ்வர் மனித உரிமை மீறல் குறித்து பேசும் சம்பந்தன் எம்.பி. அரந்தலாவ பிக்குகள் கொலை, காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள் என்பன குறித்து மறந்து பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.சனல்-4 அலைவரிசையை விமர்சித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன அவை நம்பகமற்றவை என்றார்.ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த பியசேன எம். பி. புலிகளை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் தமிழ் மக்களின் அழிவுக்கு அந்தக் கட்சியே பொறுப்பு எனவும் கூறினார். பொய் பிரசாரங்கள் செய்து த.தே. கூ. தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குப்பிட்டார்.
சம்பந்தன் எம்.பி. யின் உரைக்கு ஆளும் தரப்பு எம். பி. கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து ஒரு கட்டத்தில் அவர் பேச்சை நிறுத்தி ஆசனத்தில் அமர்ந்தார்.

Post a Comment

0 Comments