இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் திருப்தி அடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் வழங்கக் கூடிய நிவாரணம் தொடர்பில் சாதகமாக செயற்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜீ. எஸ்.பி.சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பில் இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடினார்கள்.
இந்த சலுகையை நீடிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக இலங்கையின் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதே இந்த பேச்சுவார்த்தையின் பிரதான நோக்கமாகும். இலங்கை தொடர்பான தமது மனப்பாங்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நீதித்துறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இந்தக் குழு நீதி அமைச்சரிடம் வினவியதோடு நீதித்துறையில் சட்ட சீர்திருத்தம், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல், வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீதிமன்ற அறைகளை மேம்படுத்துதல் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரித்தல் ,அரசியலமைப்பு மறுசீரமைப்பு முதலியன தொடர்பில் நீதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்
0 Comments