Home » » சிறிலங்கா தொடர்பில் ஐ.நா தயாரித்துள்ள அறிக்கை

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா தயாரித்துள்ள அறிக்கை

 


சிறிலங்காவில் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற முறைமை இருப்பதாகத் ஐ.நா தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(antonio guterres), சிறிலங்கா உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் அறிக்கை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் ஐல்ஸ் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸால் நேற்று வழங்கப்பட்டது.

சிறிலங்கா குறித்து கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி  மனித உரிமைகள் சபைக்கு மனித உரிமைகள் ஆணையாளர், அளித்த அறிக்கையில், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற செய்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இதேவேளை இந்த நிலைமை குடிமை மற்றும் ஜனநாயக இடத்தில் ஒரு குளிர் விளைவை உருவாக்குகிறது மற்றும் சுய தணிக்கைக்கு வழிவகுக்கிறது என உயர் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே அரசு முகவர்களின் மிரட்டல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான கண்காணிப்புகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தினார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |