நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama )தெரிவித்துள்ளார்.
எனினும், பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே, பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், இந்த நடைமுறையை மீறும் பேருந்துகளை தமது வசப்படுத்திக் கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், ரயில் போக்குவரத்துக்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தும் நடத்தாதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 Comments