12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பிள்ளைகளை தடுப்பூசி பெற்றுக்கொள்ள அனுப்ப வேண்டாம் என்றும், இது போன்ற ஒரு முடிவு இதுவரை எடுக்கவில்லை எனவும் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை கூறினார். மேலும் தெரிவிக்கையில்,
12 - 19 வயதிற்குட்பட்ட குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கே தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது, நாங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதனால்தான் இது குறித்து நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.
எனவே, ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு விரைந்து செல்ல வேண்டாம் என்று டாக்டர் ஹேரத் கேட்டுக் கொண்டார்.
நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம், சரியான நேரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறினால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது COVID-19 நிலைமையை மோசமாக்கும் என்றும் டாக்டர் ஹேரத் கூறினார்
0 comments: