தேசிய நெடுஞ்சாலைக்கு ஏற்றதாக ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியை விஸ்தரிக்கும் பணிகள் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் ஏறாவூர் நகரில் வீதி விஸ்தரிக்கப்படும் எல்லையை அளந்து அடையாளமிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே விஸ்தரிக்கப்பட்டுள்ள ஏறாவூர் நகர பிரதான வீதி ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. தற்போதுள்ள வீதியில் வருவதும் போவதுமாக ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் மாத்திரமே செல்லக் கூடியதாகவுள்ளது.
இது இனிமேல் தேசிய நெடுஞ்சாலைத் தராதரத்திற்கேற்ப இருவழிப்பாதையாக அதாவது ஏக காலத்தில் வீதியில் வருதற்கும் போவதற்குமாக நான்கு வாகனங்கள் பயணிக்க முடியும்.
அகலமாக்கப்படும் நவீன நெடுஞ்சாலையின் ஒரு மருங்கு 36 அடி அகலமானதானதாக இருக்குமென்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் வீதி விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.
புதிய வீதி விஸ்தரிப்பின் காரணமாக ஏறாவூர் நகர கடைத் தொகுதிகளிலுள்ள பலரது கடைகள் பாதியளவுக்கு உடைக்கப்படவேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments