
மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் பிரதேச காணியை அம்பாறை உடன் சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட கித்துள்கிராம சேவையாளர் பிரிவில் உள்ள புளியடிப்பொத்தானை பகுதியில் நெடியவட்டைக்குளம் அமைந்துள்ளது .
இப்பிரதேசம் பாரிய நிலப்பரப்பை உடையதோடு மிக நீண்ட காலமாக கால்நடைகளின்; மேய்ச்சல்தரையாகவும் கால்நடைகளுக்குரிய குடிநீர்க் குளமாகவும் பயனபடுத்தப்பட்டு வருகின்றது .
இதனை கால்நடைகளின் மேய்ச்சல் தரைகுரிய பராமரிப்பு குடி நீர்தேவைகளுக்காக குளத்தைப் புனரமைப்பு செய்வதற்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அப்பிரதேச கால்நடைச் சங்கம் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் பணம் அறவிட்டு ஆரம்ப வேலைகளைச்செய்யத் தொடங்கியுள்ளது .
இச்சந்தர்ப்பத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பும் , கடந்த ஒரு வாரகாலப்பகுதிக்குள்ளும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தம்பிட்டிய பகுதியிலுள்ள பெருன்பான்மை இனத்தைச்சேர்ந்த பாதுகாப்புபடையினரும் பௌத்த பிக்குகள் சிலரும் வந்து இப்பகுதிக் காணிகள் தங்களுடையது என உரிமைபாராட்டுவதோடு இப்பகுதிக்குள் நீங்கள் வரக்கூடாது எனவும் இக்காணிகளில் கரும்புச் செய்கையைத் தாம் ஆரம்பிக்கவுள்ள தாகவும் கூறியதோடு . அப்பகுதியில் நின்றபலரை எச்சரித்துச்சென்றுள்ளனர் .
இப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்டபட்ட மேய்ச்சல்தரை காணிகள் அவற்றிற்கான குளமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பரச்சினைகளை அடுத்து மக்கள் என்னிடம் முறையிட்டதற்கமைவாக நேரடியாகச் சென்று பார்வையிட்டு நிலமைகளை அறிந்து கொண்டேன்.இதற்கு அனுமதிவளங்கியது எவ்வாறு? எமதுவளங்களை எம்மக்களே அனுபவிக்கவேண்டும்.
மேலும் இப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாகும் . எனவே இப்பகுதியை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு செங்கலடி பிரதேசசெயலாளரிடம் முறையிட்டுள்ளேன்.
இவைமட்டுமின்றி இந்தப்பிரதேசத்தினை அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளை உடனடியாகத்ததடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments