Advertisement

Responsive Advertisement

நித்யானந்தாவின் பிறந்தநாளில் சன்னியாசியான ரஞ்சிதா

நித்யானந்தாவுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா இன்று முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடராகி இருக்கிறார்.
இன்று நித்யானந்தாவின் 37வது பிறந்தநாள் பெங்களூரில் உள்ள பிடரி ஆசிரமத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்து வந்த ரஞ்சிதாவிற்கு நித்யானந்தா இன்று தீட்சை வழங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு ’மா ஆனந்தமாயி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நித்யானந்தாவிடம் சன்னியாசம் பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், ”சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன்.
சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். இனிமேல் எப்போதும் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில்தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா படுக்கையறையில் இருப்பது போன்ற காணொளி ஒளிபரப்பானது. இந்தக் காணொளி ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது.
இதனால் பல சர்ச்சைகள் எழுந்து நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments