பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் அடை மழை வீழ்ச்சி காரணமாக 100,000க்கும் அதிகமான வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந் நாட்டு மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசி வருவதுடன் பல பிராந்தியங்களில் கடும் பனிப்பொழி இடம்பெறுகின்றது. பிரித்தானிய சுற்றுச்சூழல் நிலையம் 150 பிராந்தியங்களில் வெள்ள அனர்த்த எச்சரிக்கைகளையும் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் மட்டும் 50க்கு மேற்பட்ட வெள்ள அனர்த்த எச்சரிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
|
தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு இங்கிலாந்தில் 1200 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சுமார் 7500 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அத்திலாந்திக் சமுத்திரத்திலிருந்து பிறிதொரு புயல் வீசலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடுமையான காற்று வீசி வருவதால் தென் புகையிரத சேவை லண்டனுக்கும் சட்விக்குமிடையிலான அதிவேக புகையிரத சேவை என்பன ஸ்தம்பிதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
|
0 Comments