நூருள் ஹுதா உமர்.
காரைதீவு பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் விசேட தேவையுடையோர்களின் அன்றாட செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்வதற்காக முன்னுரிமை அடிப்படையில் காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள கிராம சேவக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பயனாளிகளுக்கான சக்கர நாற்காலி, மூக்குக் கண்ணாடி, ஊன்றுகோல், நடைச் சட்டம் என்பன பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (28) வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் செல்வி என்.ஜயஷர்மிகா, சமூகசேவை உத்தியோகத்தர் குருஸ் குணரத்தினம் உட்பட பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
0 Comments