Home » » கல்வி கற்பதற்கு பாடசாலைக்கு செல்லாதுள்ள மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!!

கல்வி கற்பதற்கு பாடசாலைக்கு செல்லாதுள்ள மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!!


பாடசாலை மாணவர்கள் பலர், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள காரணத்தினால் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட செயலகம் தீர்மானித்துள்ளது

இதற்கமைய. மாணவர்கள் பாடசாலை செல்லாது உள்ளமைக்கு, போதைப் பொருள் பயன்பாடு ஒரு காரணமாக உள்ள நிலையில், அந்த நிலைமை கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பாடசாலை செல்லாது உள்ளமைக்கு போதைப்பொருள் பயன்பாடு மாத்திரமன்றி பல்வேறு காரணிகள் காணப்படுவதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் பெற்றோர்கள் மற்றும் ஏனைய பெற்றோர்கள், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பும் முக்கியத்துவத்தை அறியாது உள்ளமையே, இதற்கு பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில், பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |