Advertisement

Responsive Advertisement

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும்




( றம்ஸீன் முஹம்மட்)

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற, வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், அவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.


பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக  வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி, அதன் வளர்ச்சிக்காய் உழைத்த வைத்திய கலாநிதி றிபாஸின் பணியினை பாராட்டும் வகையில் அவ்வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவைநலன் பாராட்டும், பிரியாவிடை நிகழ்வும் கடந்த வியாளன்  இடம்பெற்றது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தரமுகாமைத்துவப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம். இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.சீ.மாஹிர் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வைத்திய கலாநிதி றிபாஸின் சேவைகளைப் பாராட்டி, வைத்தியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

Post a Comment

0 Comments