Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

 


(வரதன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது தடுப்பு ஊசி 25 வீதமானவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 65 வீதமானவர்கள 3வது தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்ளவில்லை எனவும் ஒமிக்ரோன் வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் நோயினால் 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த ஒருவாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். திடிரென கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஒமிக்ரோன் தாக்கம்  அதிகரித்துள்ளது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100 மேற்பட்ட நோயாளிகளும் சந்தேகிக்கப்படும் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப் பட்டுள்ளனர்.கடந்த 3 தினங்களில் 500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைகளில் வைத்து பராமரிப்பதற்கான போதிய இடங்கள் இல்லை.ஆகவே பொதுமக்கள் இந்த ஒரு அபாயத்தை உணர்ந்தவர்களாக எனவே தேவையற்ற விதத்தில் கூட்டம் கூடுதலை நிறுத்தவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றபோது ஒன்று கூடுவதை நிச்சயமாக தவிர்த்துக் கொள்ளவேண்டும் அதேவேளை ஒன்று கூடுவதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகள் உயர்அதிகாரிகள் என உயர்வு தாழ்வு பார்க்காது சட்டம் அனைவருக்கும் சமம் என்ற விதத்தில்தான் சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் இன்றுஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments