( றம்ஸீன் முஹம்மட்)
கிரிக்கெட் துறையினை இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் அனுசரணையில் கல்முனையின் முன்னணி விளையாட்டுக் கழகமான கல்முனை ரினோன் விளையாட்டு கழகத்தின் ரினோன் விளையாட்டு கழக கிரிக்கெட் பயிற்றுவிப்பு நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க கிரிக்கெட் விளையாட்டு உபகணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கல்முனை ரினோன் கிரிக்கெட் விளையாட்டு கழக அகடமியின் பணிப்பாளர் எம்.எப்.எம். அப்சல் ரிப்கியின் நெறிப்படுத்தலில் ,கல்முனை ரினோன் விளையாட்டு கழகத்தின் செயலாளர் எஸ்.எச்.எம்.அஸ்மி அவர்களின் தலைமையில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக றிஸ்லி முஸ்தபா அவர்களும் கெளரவ அதிதியாக கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் ஏ.சிவநாதன், சிறப்பு அதிதியாக கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments: