Home » » தேசிய ரீதியில் நடாத்தப்படும் "வனிதா அபிமான | ஆளுமைப் பெண்கள்" போட்டியில் மாகாண மட்டத்தில் இறக்காமத்திற்கு இரண்டு விருதுகள்

தேசிய ரீதியில் நடாத்தப்படும் "வனிதா அபிமான | ஆளுமைப் பெண்கள்" போட்டியில் மாகாண மட்டத்தில் இறக்காமத்திற்கு இரண்டு விருதுகள்




( றம்ஸீன் முஹம்மட்)

நாட்டிலுள்ள பெண் திறமையாளர்களை  இனம்கண்டு அவர்களை கௌரவப்படுத்தும்  தேசிய ரீதியான தளமான இலங்கை வனிதாபிமானவின் இரண்டாம் கட்டம் - 2021  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சகல துறைகளிலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களை ஒவ்வொரு மாகாணமாக இனம் கண்டு தேசிய ரீதியான போட்டிக்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.
NDB மற்றும் News 1st இணைந்து நடத்திய  ஸ்ரீலங்கா வனிதாபிமான 2021 போட்டி நிகழ்ச்சியில் இறக்காமம் பிரதேசம் சார்பாக கலந்து கொண்ட இருவர் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் கணக்குப் (பிரிவு)  கவிதாயினி திருமதி பர்சானா றியாஸ்  கலைத்துறையில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டி உள்ளதோடு தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹிஜ்றா மகளீர் சங்க தலைவியும் பெண் செயற்பாட்டாளருமான திருமதி எஸ்.டி நஜீமியா தொழில் முனைவோர் மற்றும்  முயற்சியாண்மைத் துறையில் மாகாண மட்டத்தில் நான்காம்  இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
மனித வளங்கள், நிதி மேலாண்மை, விற்பனை மற்றும் ஊக்குவிப்பு, சுற்றுலா, கலை, விளையாட்டு, அரசு துறை  , தொழில் முனைவோர் மற்றும் முயற்சியாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்களிப்பு செய்யும்  தொழில்முறை தகுதிகளைக் கொண்ட பெண்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் வெற்றி, அதிக எண்ணிக்கையிலான சாதனையாளர்களை விரிவுபடுத்தவும் அரவணைக்கவும் வழி வகுத்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |