பால்மாவின் விலையை 100 ரூபாவாலும், எரிவாயு விலையை 275 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. எனினும், இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தபோது, இந்தப் பொருட்களின் விலை மாற்றங்கள் பண்டிகைக் காலத்தில் மாற மாட்டாது என தெரிவித்தார்.
கூட்டுறவு மொத்த விற்பனவு ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.எச்.எம்.பாராஸ் தொவிக்கையில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க சதொச தயாராக உள்ளதெனக் குறிப்பிட்டார். நாடெங்கிலும் உள்ள 400 கிளைகளுக்கு அப்பால், நடமாடும் சேவைகள் ஊடாகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யப்போவதாக இந்த ஊடக மாநாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த டபிள்யு.எச்.டீ.பிரியதர்ஷனவும் உரையாற்றினார். போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக அவர் கூறினார்.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அலுவல்கள் சபை சுற்றிவளைப்புக்களை விரிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதத்தில் இதுவரை 17 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். -(3)
0 Comments