Home » » சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இராசரெத்தினம் தவராசா அவர்கள் கல்வி துறையில் 33 வருடங்களைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்றார்

சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இராசரெத்தினம் தவராசா அவர்கள் கல்வி துறையில் 33 வருடங்களைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்றார்


பட்டிருப்பு கல்வி வலய சமூகவிஞ்ஞான பாடத்துறைக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இராசரெத்தினம் தவராசா அவர்கள் கல்விச் துறையில் 33 வருடங்கள் சேவையை நிறைவு செய்து  இன்று  ஓய்வு பெறுகின்றார். 


களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்திலும் தரம் 6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை பட்டிருப்பு மத்தியமாகா வித்தியாலயத்தியலும் கல்வி கற்றார். உயர்தரத்தில் கலைப்பிரிவில் கற்று சித்தியடைந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி கலைப்பட்டதாரியாக வெளியேறினார்.



பட்டப்படிப்பினை முடித்துக் கொண்டு வெளியேறிய இவர்  ரெட்பாணா, வீதி அபிவிருத்தி அதிகார சாபை போன்றவற்றில் சேவையாற்றி 1985 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தை பெற்று வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் மூன்று வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றி அதன் பின்னர்  தான் கற்ற பாடசாலையான பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு 1988 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று வந்து அப்பாடசாலையில் ஆசிரியராகவும், உப அதிபராகவும் பத்து வருடங்கள் கடமையாற்றினார். இக்கால கட்டத்தில் திறந்த பல்கலைக்கழததில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் பொற்றுக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் அவர் பாடரீதியாக கொண்டிருந்த பாண்டித்தீயம் காரணமாக 1998 ஆம் ஆண்டு பட்டிருப்பு கல்வி வலயத்தின் சமூகவிஞ்ஞான பாட துறைக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த. உயர்தரம் போன்ற பொதுப்பரீட்சைகளில் மாணவர்கள் சமூகவிஞ்ஞான துiறாசர்ந்த வரலாறு,புவியியல்,குடியுரிமைக்கல்வி ஆகிய பாடங்களில் கூடிய சித்தி வீதத்தினை பெறுவதற்கும் மாணவர்கள்  சமூகவிஞ்ஞான போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனை படைத்து கிழக்கு மாகாணத்தில் தொடர்சியாக பட்டிருப்பு வலயம் முதலாவது இடத்தனை பெறுமளவிற்கு இவரது சேவை இன்றியமையாதாக இருந்தது.
  
அது மாத்தரமின்றி இவர் ஆசிரிய ஆலோசகராக சேவையாற்றிய காலத்தில் அனைத்து தரங்களிற்கும் வரலாறு, புவியல் போன்ற பாடங்களுக்கான  மாணவர்களுக்கான வினாவிடைப் பயிற்சிபுத்தங்கள், தேசப்படப் பயிற்சிபுத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களுக்கான கற்பித்தலை இலகுபடுத்தும்  இலகுவழிகாட்டி புத்தகங்கள் என்பனவற்றை வெளியிட்டு ஆசிரியர்,மாணவர்களின் கற்றல் கற்பித்தல் விருத்திக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அன்னார் ஆசிரியர்; சேவையில் 13 வருடங்களையும் ஆசிரிய ஆலோசகர் சேவையில் 20 வருடங்களையும் மொத்தமாக கல்வி துறையில் 33 வருடங்களையும் பூர்த்தி செய்து இன்று ஓய்வுபொறுகின்றார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |