ஆப்கானிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியதால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஃபரா மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான நாசர் மெஹ்ரி கூறுகையில், இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து ஹெராத் மாகாணத்திற்கு அருகே விழுந்துள்ளதாக தெரிவித்தார்.
இறந்தவர்களில் மேற்கு ஆப்கானிஸ்தானின் துணை இராணுவப் படைத் தளபதியும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.
ஹெராத் மாகாணத்திற்கு செல்லும் பாதையில் மோசமான வானிலை நிலவியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த உலங்கு வானூர்த்திகள் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வேறு செய்திகள் கூறுகின்றன.
0 Comments