சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் குரல் என்ற ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கொள்ளுப்பிட்டி லிபேட்டிக் சுற்றுவடத்திலேயே இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பை மீறும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமையை பிரதானமாகக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கியதேசியக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் ஆயிரக்கணகான ஐக்கியதேசியக் கட்சி ஆதரவாளர்கள் அணிதிரண்டுள்ளதுடன் இன்னும் சற்று நேரத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்விடத்தில் உரையாற்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கென விசேட வாகனம் ஒன்றும் ரணிலுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை குறுத்த ஆர்ப்பாட்டத்துக்கெதிராக கறுவாத்தோட்டை பொலிஸார் நீதிமன்றில் கொண்டுவந்த தடை உத்தரவை நீதவான் நிராகரித்திருந்ததுடன் ஆர்ப்பாட்டத்துக்கு நிபந்தனையுடனான அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments