Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருதில் ஐஸ், ஹெரோயினுடன் சொகுசு கார் மீட்பு !

 


நீண்டகாலமாக சொகுசு கார்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று மாலை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி பிரபல உணவகத்திற்கருகில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சொகுசு காரில் போதைப் பொருட்களுடன் பயணித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


இவ்வாறு கைதான நபர்கள் கல்முனைப்பகுதியை சேர்ந்த 44 மற்றும் 23 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 6 கிராம் 80 மில்லி கிராம் மற்றும் ஹெரோயின் 5 கிராம் 580 மில்லி கிராம் உள்ளிட்ட 4 கைத்தொலைபேசிகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments