இரண்டாம் இணைப்பு
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், கொள்ளுப்பிட்டி நோக்கி பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடத் தடை என நீதிமன்று உத்தரவிட்டுள்ள நிலையில், கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, காவல்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவினை வாசித்துக் காட்டியுள்ளனர்.
எனினும் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Multiple #activists are engaged in a #protestLK in Thummulla, #Colombo - Reporter#Court issued an order preventing the protesters from heading to #GalleFace via Union Place - #Police Spokesperson#lka #SriLanka #SLnews pic.twitter.com/XlkRrg9CGx
— Zulfick Farzan (Official) (@FarzanZulfick) January 16, 2023
மேலும் காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் சற்று முன்னர் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெருமளவில் திரண்ட போராட்டக்காரர்கள்
இந்த போராட்டத்திற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் திரண்டிருந்தனர்.
அத்துடன் எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணம் அவர்கள் அங்கு போராட்டத்தை ஆரம்பித்தனர். இதேவேளை இந்த போராட்டம் கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
இரகசிய இடத்திற்கு மாற்றம்
இதனையடுத்து இரகசியமாக போராட்ட இடத்தை மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதியில் தற்போது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
0 comments: