சமூகத்தில் கொரோனா நோயாளிகளை சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும், இவர்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சும் பிற துறைகளும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நோயாளிகளின் பழகியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார சேவைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறை சேவைகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கோவிட் 19 வைரஸ் பரவுவது குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட லங்காபுரா பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நபர், கந்தக்காட்டில் அடையாளம் காணப்பட்ட நோயாளியின் உறவினராவார்.
இந்த சூழ்நிலை காரணமாக, பிரதேச செயலகம் மற்றும் அதை சார்ந்துள்ள மக்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டதுடன், 325 க்கும் மேற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனைகளுக்காக மாதிரிகள் பெறப்பட்டன என்றும் அவர் கூறினார்.
லங்காபுரா பகுதியில் போக்குவரத்து தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், இப்பகுதியில் வழக்கம் போல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் PCR பரிசோதனைகளின் முடிவுகளைப் பெற்ற பிறகு நிலைமையை மதிப்பிட முடியும் என்று அவர் கூறினார்.
0 comments: