கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் அதற்கு கருணா பாராளுமன்றம் செல்ல வேண்டும். அவர் மூலமாக மாத்திரம் தான் அதனை நிறைவேற்ற முடியும் என முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் தெரிவித்தார்.
காரைதீவில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
சுதந்திரத்திற்குப் பின் அம்பாறை மாவட்ட தமிழர்களில் எம்.பியாக முதலில் வந்தவர்கள் ஏதோ சிலவற்றைச் செய்தார்கள்.
ஆனால் இறுதியாக வந்த பியசேன மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் தங்களை வளர்த்தார்களே தவிர மக்களுக்கு ஏதும் செய்யவில்லை.
இவர்கள் கடந்த நாலரை வருடங்கள் வீணாக காலத்தைக் கழித்துவிட்டு வாக்களித்த மக்களையும் ஏமாற்றிவிட்டு இன்று மீண்டும் வருகிறார்.
என்னமுகத்தோடு அவர் வாக்குக்கேட்டு வருகிறார். என்ன தகுதி, உரிமை இருக்கிறது. பெயருக்கு ஒரு விஞ்ஞாபனம். அதில் ஒன்றையாவது நிறைவேற்ற முடிந்ததா? வெளிநாட்டுப் பயணம். நிதிச்சேகரிப்பு அவ்வளவே முடிந்தது என்றார்.
0 Comments