ஷமி மண்டூர்)களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மட பிரதான வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கிய மண்டூரைச் சேர்ந்த இளைஞன் ஏகாம்பரம் சசிக்குமார் (25) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று 26 உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்டூரில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் களுவாஞ்சிகுடி பிரதான வீதி ஊடாக சென்று கொண்டிருக்கும் போது குருக்கள்மடம் பிரதான வீதியில் கட்டுபாட்டை இழந்து நேருக்கு நேர் பயணித்த காருடன் மோதியதில் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments