நேற்று முன்தினம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவ் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது மரத்தின் மேல் இருந்த சிறுத்தை பாய்ந்ததால் அங்கு தொழில் புரிந்த பெண் தொழிலாளர்கள் 2 பேர் காயமுற்ற நிலையில் பொகவந்தலாவ கிராமிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுத்தையைக் கண்டு பயந்த அவர்கள் தப்பித்துக்கொள்ள முயற்சித்த வேளையில் இவர்கள் காயமடைந்ததாக கூறியதுடன், வனப்பகுதியில் உள்ள சிறுத்தைகள் ஏனைய வன விலங்குகளை வேட்டையாடுவதினாலும், பெருந்தோட்டப் பகுதியில் அதிகளவு தேயிலை தோட்டங்கள் காடாகி வருவதாலும் இவ்வாறான சிறுத்தைகள், புலி ஏனைய வனவிலங்குகளினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதாக குறித்த பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பல தோட்டங்களிலும் இவ்வாறான சிறுத்தைகள் உள்ளதை அங்கிருந்து வனப்பகுதிக்கு விரட்டும் வேளையில் நல்லதண்ணி வனபாதுகாப்பு அதிகாரி மேற்கொண்டுள்ளதாக வனபாதுகாப்பு அதிகாரி பிரகாஸ் கருணாதிலக்க தெரிவித்தார்.
0 Comments