Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் தொடரும் இளம் யுவதிகளின் தற்கொலை: வவுணதீவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை

 

ஷமி மண்டூர்)

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுணதீவு மாரியம்மன் கோயில் வீதி விளாவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த பேரின்பம்-கிஜானி (16) வயதுடைய இளம் யுவதி தனக்குத்தானே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் குறித்த யுவதி கா.பொ.த சாதாரணதரம் கற்று வருவதாகவும் அவர் ஒரு இளைஞனை நீண்ட காலங்களாக காதலித்து வந்ததாகவும் அவரின் தாயார் குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் சம்ப தினமான நேற்று அவரின் தற்தையார் உறவினர் வீட்டுக்கு சென்றுவந்து பார்த்த வேளையில் வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கூரையின் ஊடாக உட்சென்று பார்த்தவேளையில் குறித்த யுவதி தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் அறியமுடிந்துள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments