Advertisement

Responsive Advertisement

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் அரச தரப்பு வெளியிட்ட தகவல்

 


ர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வழங்கியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியத்தின் இந்த அறிக்கையை அமைச்சரவை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஆய்வு செய்த பின்னர், அரச தலைவரின் ஆலோசனையுடன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது உட்பட பல ஆலோசனைகளை உள்ளடக்கி சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை தயார் செய்துள்ளதுடன் அதனை அண்மையில் அரசாங்கத்திடம் கையளித்தது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வழங்கியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, நிரோஷன் பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments