இந் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட இ.ஆ.சங்கச் செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமாகிய பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் மட் மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் 26.03.2022 சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெனாண்டோ அவர்களும் இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்களும் இ.ஆ.சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் தீபன் திலிபன் அவர்களும் வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான இ.ஆ.சங்கத்தின் பிரதிநிதிகள் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான இ.ஆ.சங்கத்தின் பொறுப்பாளர்கள் அக்கரைப்பற்று சம்மாந்துறை, கல்முனை, பட்டிருப்பு, மட்டக்களப்பு வலயங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பெருந்திரளானோர் கிழக்கு மாகாணத்திற்கான இ.ஆ.ச. பேராளர் மாநாட்டில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பேராளர் மாநாட்டில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அதன் பின் வரவேற்பு நடனம், வரவேற்புரை, பாடல்கள், கவிதைகள், இ.ஆ.சங்கத்தின் பொறுப்பாளர்களது உரைகள் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு கிழக்க மாகாண ஆசிரியர்கள் தங்களது பூரண ஆதரவை வழங்கியிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட இ.ஆ.சங்கத்தின் செயலாளர் தலமையுரையில் இந்திய, தென்தாபிரிக்காவின் சிறந்த கல்விமுறை ,அதனால் ஏற்பட்ட நன்மைகள் பற்றியும், இலங்கைக் கல்விச் சீர்திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை ஒப்பிட்டு ரீதியில் மிக விளக்கமாகக் கூறினார். இலங்கையில் இன்று கல்வியில் எதிர்நோக்கியுள்ள சவால்கள், பிரச்சினைகள், கல்வியில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு, குறிப்பாக மட்டக்களப்பில் கல்வியில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு, கல்வி அதிகாரிகளின் அடக்குமுறை, எதிர்காலச் சந்ததிக்காக அதிபர்கள், ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், சமகாலத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகள், சவால்கள் என பல ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துக்கூறினார்.
வடக்கு மாகாண இ.ஆ.சங்க பொறுப்பாளர் தீபன் திலிபன் அவர்கள் இலங்கை தற்போது அடைந்துள்ள நிலை , கல்விக் கொள்கைகள் , சுயநிர்ணய உரிமை, கல்வியில் அரசியல் மயமாக்கல், இலங்கை ஆசிரயர் சங்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள், தற்போதைய செயற்பாடுகள், அடக்கு முறைகளைத் தாண்டி இலங்கை ஆசியர் சங்கத்தின் செயற்பாடு , சம்பளமுரண்பாடு தொடர்பாக இடம்பெற்ற போராட்டம் என பல விடயங்கள் தொடர்பாகக் கருத்துக்களைக் கூறினார்.
இ.ஆ.சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜேசப் ஸ்டாலின் கிழக்கில் கல்வி அதிகாரிகளின் செயற்பாடு, கல்வியில் அரசியல் செல்வாக்கு, சமகாலப் பிரச்சினைகள், சவால்கள், சம்பள முரண்பாட்டின் போது மேற்கொளள்ளப்பட்ட போராட்டம், வெற்றியின் தன்மை , ஆசிரியர்களின் ஒற்றுமை அடக்கு முறைக்கு எதிராக செயற்பட்ட விதம், இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக நின்று சவால்களை வெற்றி கொள்ளல், எதிர்காலத்தில் இ.ஆ.சங்கத்தின் செயற்பாடு, அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், நிறைவேறாவிட்டால் அடுத்தகட்டச் செயற்பாடுகள், அனைத்தையும் வென்றெடுக்க ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், இலங்கையில் இருக்கின்ற ஆசியர் சங்கங்களில் மிகப்பழமையான சங்கத்தில் இணைந்துகொள்ளுமாறும் கருத்துக்களை வழங்கினார். 22 அம்சக்கோரிக்கைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. அதிபர்கள் ஆசிரியர்களால் எழுப்ப்பட்ட கேள்வி நேரத்தில் செயலாளர் விளக்கத்தினையும் தீர்வினையும் கூறினார். நன்றியுரையுடன் பி.ப 1.45 மணியளவில் மாநாடு நிறைவுபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழில் திரு.ஜெயதீபன் ஆசிரியர் அவர்களும் ஆங்கிலத்தில் திருமதி. சரண்யா சஞ்சீவ் அவர்களும் அறிவிப்பினை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments