Advertisement

Responsive Advertisement

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை சுவீகரிக்கிறார்களா? ஆச்சரியத்துடன் கேட்ட கோட்டாபய


 வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.



நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட அரச தலைவர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு அரச தலைவர் செயலகத்தில்  இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1.30 மணி வரை நடைபெற்றிருந்தது.

இதன்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என அரச தலைவரும், பிரதமரும் தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் த.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments