பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் இன்று (16.04.2024) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கல்வி நிருவாக சேவையின் முதலாந்தர அதிகாரியாவார். அத்துடன் அனுபம் கொண்ட சிறந்த முகாமையாளராக தன்னை நாடி வரும் பயனாளிகளை இன்முகத்துடன் வரவேற்று அவர்களின் பிரச்சினைகளை உடன் அணுகி பணியினை ஆற்றிய சிறந்த முகாமையாளராகும். ஆசிரியராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, வலயக் கல்விப் பணிப்பாளராக, கிழக்கு மாகாணத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாகவும், கல்வி, திட்டமிடலில் முதுமானிப் பட்டம், கல்வி முதுமானிப் பட்டம் போன்ற உயர் பட்டங்களைப் பெற்ற சிறந்த கல்விமானாகும்.
0 comments: