மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் இன்று அதிகாலையில் இடம் பெற்ற விபத்து
நேற்றிரவு மட்டு #குருக்கள்மடத்தில் மின்சாரத் தூண்களை பதம்பார்த்த மகேந்திரா வாகனம்
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டு கல்முனை பிரதான சாலை வழியே நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்த மகேந்திரா ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த உயர் அழுத்த மின்சாரத் தூனில் மோதியுள்ள நிலையில் மின்சாரத்தூண் உடைந்து விழுந்துள்ளது அதனை அடுத்து அதனுடன் தொடர்புபட்டிருந்த இரண்டு மின்சாரத்தூண்களும் சரிந்து விழுந்துள்ளது.
இவ் விபத்து காரணமாக அப் பகுதிக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
0 comments: