Advertisement

Responsive Advertisement

ஜப்பானின் கடல்பகுதியில் உடல்களுடன் கரையொதுங்கும் மர்ம கப்பல்கள்

மனித எலும்புக்கூடுகளுடன் நவம்பர் மாதத்தில் நான்கு சிறிய கப்பல்கள் ஜப்பானின் கடற்கரைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட கப்பல்கள் வடகொரியாவிலிருந்து வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் கொன்சு தீவின் மியாசாவா கடற்கரைப்பகுதியை வந்தடைந்த கப்பலொன்றில் எட்டு உடல்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத படகை வெள்ளிக்கிழமையே அவதானித்துவிட்டதாகவும் எனினும் திங்கட்கிழமையே எலும்புக்கூடுகள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சிறிய கப்பல் வடகொரியாவிலிருந்து வந்துள்ளதாக என்பதை உறுதிசெய்ய முடியாத போதிலும் ஏற்கனவே ஜப்பானிய கடற்பகுதிக்கு வந்துசேரும் கப்பல்களை போலவே இந்த கப்பல் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் நான்கு படகுகளை மீட்டுள்ளதாகவும் இவற்றிலிருந்து 1 வடகொரிய பிரஜைகளின் உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் 11 வடகொரிய பிரஜைகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
வடகொரியாவில் காணப்படும் பாரிய பட்டினி நிலை காரணமாக அங்கிருந்து தப்பியோடும் முயற்சியின் போது மரணித்தவர்களின் உடல்களாக இவையிருக்கலாம் என அதிகாரிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments