இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பருத்தித்துறை டிப்போ பஸ்கள் மீது, இன்று காலை இனந்தெரியாதோர் கற்கள் வீசித் தாக்குதல்களை மேற்கொண்டதால், பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ் சேவைகள், காலை 10.30 மணியுடன் இடைநிறுத்தப்பட்டது.
எனினும், ஏனைய பாதைகளினூடாக பஸ் சேவைகள் அனைத்தும் இடம்பெற்றன.
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பாதுகாப்பு தரப்பு மற்றும் நிருவாக அதிகாரி ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்டித்து, நேற்று யாழ்ப்பாணம் இ.போ.ச டிப்போ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இப்பணிப்புறக்கணிப்புக்கு, பருத்தித்துறை இ.போ.ச டிப்போ ஊழியர்கள் ஆதரவு தெரிவிக்காது, பருத்தித்துறை இ.போ.ச டிப்போ பஸ் சேவைகள் யாவும் நேற்று அதிகாலை முதல் வழமை போல் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தன.
இந்நிலையிலேயே, இந்த கற்கள் வீசித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
0 Comments