ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒரே அறையில் போட்டு 24 மணி நேரங்களுக்கு பூட்டி வைத்தால் அவர்களுக்கு இடையே காணப்படும் பிரச்சினைக்கு இரண்டில் ஒரு தீர்வை கண்டு விடலாம் என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே காணப்படும் பிரச்சினை தனிப்பட்டதே. கொள்கை ரீதியானது அல்ல. தனது கட்சியின் செயலாளராக இருந்தவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வைராக்கியமே மகிந்தவிடம் இருக்கின்றது. இருவரையும் அறையொன்றில் 24 மணி நேரத்திற்கு பூட்டி வைத்தால் இரண்டில் ஒன்றை காணலாம். ஒன்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்வார்கள் இல்லையேல் இருவரும் அடித்துக்கொண்டு முடிவொன்றுக்கு வருவார்கள். அவ்வளவுதான். என அவர் தெரிவித்துள்ளார்
0 Comments