Home » » 10 வருடங்களுக்கு மேலாக இடமாற்றம் பெறாத 170 ஆசிரியர்களை இடமாற்றம் செய்த பணிப்பாளரின் துணிச்சலை பாராட்டுகின்றோம் : கல்முனை கல்வி வலய அதிபர் சங்கம்

10 வருடங்களுக்கு மேலாக இடமாற்றம் பெறாத 170 ஆசிரியர்களை இடமாற்றம் செய்த பணிப்பாளரின் துணிச்சலை பாராட்டுகின்றோம் : கல்முனை கல்வி வலய அதிபர் சங்கம்




நூருல் ஹுதா உமர்

கல்வி அமைச்சின் 20/2007ம் இலக்க தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக மிகவும் துணிச்சலோடு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படாத இடமாற்றத்தை புதிதாக வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்கள் மிக வெற்றிகரமாக எதிர்கொண்டு முடித்தமையானது கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்சியில் அவர் ஆற்றிய மதத்தான சேவையாகும். இது பாடசாலை வளர்ச்சியிலும் பொதுவாக கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கும் முக்கியமான அம்சமாக இருப்பதாக கல்முனை கல்வி வலய அதிபர் சங்கத்தின் தலைவர் இசட். அஹமட் செயலாளர் ஏ.ஜி.எம்.றிசாத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்முனை கல்விவலயத்தில் நீண்டகாலமாக ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர் இட மாற்றமானது மேற்கொள்ளப்படாதிருந்தமை கவலை அளித்த போதிலும் அதனை துணிச்சலோடு பொறுப்பேற்று அந்த இடமாற்றத்தை புதிய வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் வெற்றிகரமாக செய்து முடித்ததையிட்டு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் 170க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் அப்பாடசாலையிலேயே சேவையாற்றி இருந்தபோதும், இப்போது நடைபெற்றதை போன்ற இவ்வாறான இடமாற்றங்கள் வருடாந்தம் இடம்பெறவேண்டும் எனவும், இதன் ஊடாகவே பாடசாலைகளின் தேவையான ஆசிரியர் பங்கீடு சீராக செய்ய முடியும் எனவும்,  அதேபோன்று ஒரு ஆரோக்கியமான, சிறப்பான கல்வி வளர்சிக்கு இது துணைபுரியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |