மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதி மாணவர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தினால் இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இந்த வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி இந்த கருத்தரங்கு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையான மாணவர்கள் அதிகளவில் உள்ளதும் கல்வியில் பின்தங்கியதுமான இரு வலயங்களிலும் உள்ள மாணவர்களுக்கு மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தினால் தொடர்ந்து இவ்வாறான கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுவருகின்றன. இதனடிப்படையில் கல்குடாவுக்கான கருத்தரங்கு கிரான் மகா வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கான கருத்தரங்கு குறிஞ்சாமுனை வித்தியாலயத்திலும் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தின் உரிமையாளர் கே.விஜயகுமாரின் சமூக நோக்கத்துடனான இந்த செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களும் தங்களது பங்களிப்பினை வழங்கிவருகின்றனர். இந்த கருத்தரங்குகளை கொழும்பின் பிரபல பாடசாலையான றோயல் கல்லூரியின் ஆசிரியர் நிரோசாந்தன் நடாத்தியிருந்ததுடன் ஆரம்ப நிகழ்வில் கல்குடா வலய பிரதி கல்விப்பணிப்பாளர் சாமினி கலந்து சிறப்பித்தார். கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் கிருஸ்ணானந்தராஜா மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் ஆகியோர் இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கியதாக மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
0 Comments