ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் தரப்பினர் கிழக்கில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாகிஸ்தானிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்த தரப்பினர் கிழக்கிற்கு பயணம் செய்துள்ளனர்.
ஜிஹாதிய செயற்பாட்டாளர்கள் கிழக்கில் செய்றபட்டு வருவதாக இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
அண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கண்டி இளைஞர் ஒருவரை மலேசியா நாடு கடத்தியுள்ளது.
இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்கள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்கு இலங்கை பொலிஸார், துருக்கி, ஈராக், லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட புலனாய்வு பிரிவினரின் உதவியை கோரியுள்ளனர் என அந்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் வாழ்வதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தக் கூடுமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 Comments