இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் அறிவித்தது. இது தொடர்பில் கெலம் மக்ரே தெரிவிக்கையில்,
இந்த ஆவணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த ஆவணம் ஐநா இலங்கையுடன் இணைந்து உருவாக்கியது போல் தோன்றுகிறது.
இலங்கை இராணுவ படைகள் நடத்திய தாக்குதலிலேயே, பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது போன்ற போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது .
இதிலிருந்தே தெரிகின்றது திட்டமிட்டு ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து ஒரு போர்க்குற்ற அறிக்கையை தயாரித்திருக்கின்றது - இந்த ஆவணத்தின் மூலம் ஐநாவின் நீதி விசாரணை நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
0 Comments