கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பயணப் பொதி ஒன்றில் இருந்து மீட்கப்படட பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 முதல் 40 வயது மதிக்க தக்க இந்தப் பெண் உயரம் சுமார் 5 அடி இரண்டு அங்குளம் எனவும் அவர் கழுத்தி்ல் அணிந்துள்ள தங்கச் சங்கிலியில் ஓம் என்ற எழுத்து பதித்த பென்டன் ஒன்றும் இருப்பதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த பெண் பற்றிய தகவல் தெரிந்தால், அது பற்றி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் தொலைபேசி எண்களான 011-266 23 11 மற்றும் 011 2685151 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.



0 Comments