மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திக்கோடையை சேர்ந்த சீனித்தம்பி நவரெத்தினம்(55வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை திக்கோடைக்குள் புகுந்த யானை வீடு ஒன்றினை தாக்கியபோதே அந்த வீட்டில் இருந்தவர் படுகாயமடைந்துள்ளார்.
இவர் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியாசலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments