இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் நிகழ்வு நாளை 2015.07.30ம் திகதி மாலை 03.00 மணிக்கு நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல பிரதிநிதிகளும் கட்சி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது பிரதிநிதிகளால் இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இளைஞர் அணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
0 Comments