“மதுபாவனையை ஒழிப்போம் புகைத்தலை தடுப்போம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவர்கள் ஏற்பாடுசெய்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
தேசிய போதை ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலை மட்டத்தினாலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு, கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவர்களினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
கல்லடி,உப்போடை பேச்சியம்மன் ஆலயத்தின் வளாகத்தில் “மதுபாவனையை ஒழிப்போம் புகைத்தலை தடுப்போம்” என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நாடகம் நடாத்தப்பட்டது.
பாடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்லடி மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகிலும் விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டது.
0 Comments