கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வு விசாரணைகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எனினும், எந்த லொட்ஜில், யாருடன் தங்கியிருந்தார் என்பது குறித்த விரிவான விபரங்கள் கிடைக்கவில்லை.
எனினும், லொட்ஜில் கடமையில் இருந்த ஊழியர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸ்டியன் வீதியில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாண பெண்ணுடையது
கொழும்பு புறக்கோட்டை பஸ்டியன் வீதியில் மீட்கப்பட்ட சடலம் யாழ்பபாணத்தைச் சேர்ந்த பெண்ணுடைய சடலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை பார்வையிட்ட குறித்த பெண்ணின் கணவர், சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
குறித்த பெண் கோட்டேயில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிரந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆண் ஒருவருடன் இந்த பெண் ஏழு நாட்கள் தங்கியிருந்தார் எனவும், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குறித்த ஆண் லொட்ஜிலிருந்து பயணப் பை ஒன்றுடன் வெளியில் சென்றதாக லொட்ஜ் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



0 Comments