Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் பல முறை கட்சி தாவிய சிவகீர்தா இப்போது ஹிஸ்புல்லாவுடன்..

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனாநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான முன்னாள் மட்டு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், 
நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார். 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்ளப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை சந்தித்து சிவகீதா முன்னணியில் இணைந்து கொண்டதுடன், அவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் 5 முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.
ஹிஸ்புல்லா தமிழ் மக்கள் தொடர்பில் வைத்துள்ள நிலைப்பாடு ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில் அதனையும் பார்த்துவிட்டும் ஹிஸ்புல்லாவுடன் இணையும் இவரைப் பற்றி என்ன எழுதியா தெரிய வேண்டும் பாருங்கள் உங்கள் தெரிவு…..

ஹிஸ்புல்லாவின் வெற்றிக்காக தான் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டவர்கள் பிரச்சாரங்களில் ஈடுபட போவதாகவும் சிவகீதா கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments