Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற காதலனும் சித்தப்பாவும் கைது

நவகத்தேகம - கலேவெவ பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் குறித்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரும், சிறுமியின் காதலனான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிக்கு சிறு வயதாக இருக்கும் போதே அவருடைய தந்தை இறந்து விட்டதாகவும் பின்பு தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments