கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
இராம பிரானால் வழிபட்ட ஆலயமாகவும் அனுமான் இலங்கையினை எரித்தபோது வலில் ஏற்பட்ட தீயினை அணைத்த இடமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சம் பத்து தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை தம்ப பூஜை,மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி சிவபார்வதி விநாயகர் ஆகியோர் எருது வாகனத்தில் எழுந்தருளிய பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு ஊர்வலமாக சென்றனர்
அனுமனின் வால் நனைத்த இடமாகவும் இராம பிரானால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தக்கேணியாகவும் பிதிர்க்கடன் தீர்க்கும் இடமாகவும் உள்ள மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட பூஜைகள் நடைபெற்றன
அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ தீர்த்தக்கேணியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜா குருக்கள் தலைமையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது
இந்த தீர்த்தோற்சவத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் தீர்த்தக்கரையோரங்களில் நடைபெற்றன.

0 Comments