Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கு ஒரு புதிய சாதனையுடன் 16 பதக்கங்கள்.


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
ஜுலை மாதம் 24 முதல் 28 வரை கந்தளாய் லீலாரெட்ண விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம்.ஸயிப் 12 வயதுப்பிரிவில் உயரம் பாய்தல் நிகழ்வில்  ஒரு புதிய சாதனையுடன் 11 தங்கப்பதக்கங்கள் ,1 வெள்ளிப்பதக்கம் , 4 வெண்கலப்பதக்கங்களை வென்று பாடசாலைக்கும் , கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளதோடு தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

12 வயதுப்பிரிவில் எம்.ஆர்.எம்.ஸயிப் உயரம் பாய்தல் நிகழ்விலும் , 16 வயதுப்பிரிவில் எஸ்.எம்.அஜாத் 110 மீற்றர் தடைதாண்டலிலும் , 18 வயதுப்பிரிவில் எம்.ஆர்.எம்.லயிஸ் 110 மீற்றர் தடைதாண்டலிலும் , 16 வயதுப்பிரிவில் 4 100 அஞ்சலோட்டப் போட்டியிலும் , 20 வயதுப் பிரிவு 4 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் தங்கப்பதக்கங்களையும் , 12 வயதுப்பிரிவில் எம்.ஆர்.எம்.ஸயிப்  100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் , 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும் , 20 வயதுப்பிரிவில் எஸ்.எல்.எம்.அதீப் 400 மீற்றர் தடைதாண்டலில் வெண்கலப்பதக்கத்தையும் , 20 வயதுப்பிரிவில் ஏ.எம்.இல்மு அக்தாப் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவர்கள் , பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் , விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் , விளையாட்டு உத்தியோஸ்தர்கள் , பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வி சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments