Home » » க.பொ.த.(உ.த), 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன.

க.பொ.த.(உ.த), 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன.




கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி 1 ஆம் கட்டம் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்டம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையும், இறுதி கட்டம் செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடைத்தாள் திருத்தும் காலப்பகுதியில் 12 பாடசாலைகள் முழுமையாகவும் 26 பாடசாலைகள் பகுதி அளவிலும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பாடசாலைகள் 3 ஆம் தவணைக்காக செப்டெம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 39 பாடசாலைகளில் இடம்பெறும். 

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூடப்படும் பாடசாலைகள் விபரம்,

ரோயல் கல்லூரி, கொழும்பு 07
நாலந்தா கல்லூரி, கொழும்பு 10
இந்து கல்லூரி, கொழும்பு 04
ஞானோதய மகா வித்யாலயம், களுத்துறை
மிஹிந்து கல்லூரி, இரத்தினபுரி
புனித அன்னமாள் கல்லூரி, குருநாகல்
கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி
விஹாரமஹாதேவி பெண்கள் கல்லூரி, கண்டி
சீதாதேவி பெண்கள் கல்லூரி, கண்டி
வித்யாலோக கல்லூரி, காலி
விஹாரமாதேவி பெண்கள் கல்லூரி, பதுளை
ஊவா மகா வித்யாலயம், பதுளை 

குறித்த பாடசாலைகள் மூன்றாம் தவனை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் செப்டம்பர் 16 ஆம் திகதி திறக்கப்படும்.
3 கட்டங்களாக விடைத்தாள் திருத்தும் பணிகள்

Rating: 4.5
Diposkan Oleh:
Team New
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |