Home » » இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி - சுனாமி எச்சரிக்கை! இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படுமா?

இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி - சுனாமி எச்சரிக்கை! இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படுமா?


இந்தோனேஷியாவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டமையை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேஷியாவின் சுமத்ராவின் தீவின் தென்மேற்கில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
7 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நில அதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவின் தெலுக் பெதுங் நகரிலிருந்து சுமார் 227 கிலோமீற்றர் (141 மைல்) தொலைவில் 59 கிலோமீற்றர் (37 மைல்) ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டமையினால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
நில அதிர்வினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |